சுவையான தமிழ்
இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு...
உதாரணமாக,
"தேர் ஓடுவது எதனால்?
தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,
"அச்சாணியால்" என்பது.
தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது
அச் - சாணியால்
என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.
"நீ வசிக்கும் ஊர் எது?
உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.
"சாம்பார் மணப்பதேன்?
உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில்
"பெருங் காயத்தால்" என்பது.