கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பள்ளியில் பிப்ரவரியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 13 வயது சிறுமி மாயா கெபாலா 262 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர், இது கனடாவின் மிகக் கொடூரமான பள்ளி துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாகும்.
மாயா மூன்று முறை சுடப்பட்டு, வான் ஊர்தி மூலம் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் முதலில் அவர் இரவு தாங்க மாட்டார் என்று கூறியிருந்தனர். ஆனால், ஐந்து பெரிய அறுவை சிகிச்சைகள், செயற்கை மண்டை ஓடு பொருத்துதல் உள்ளிட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்துள்ளார்.
அவரது தந்தை டேவிட் கெபாலா சமூக வலைதளத்தில் "நான் அறிந்த மிகவும் தைரியமான நபர்" என்று மகளைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனம் மீது குடும்பங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.