இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அரசு வழியில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் புதிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். ஆதாயகரமான முயற்சிகள் நிறைவேறும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
எதிலும் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக் கொடுத்து செல்லவும். சில முக்கியமான வேலைகள் முடிவு பெறும் வியாபார புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில மாற்றங்கள் மூலம் மேன்மைகளை உருவாக்குவீர்கள். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். புதிய நபர்களிடத்தில் அமைதி வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்த பணிகளை முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் லாபம் ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். புதியவர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்கள் நியமன எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
தனுசு
எதிர்பாராத சில செலவுகள் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
உறவினர்கள் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மீனம்
தம்பதிகளுக்குள் நெருக்கங்கள் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தோற்ற பொலிவுகள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். விருப்பமான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில சிற்பங்களால் மாற்றங்கள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்