ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து கொண்டு இருந்தார் ,அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன் காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து கொண்டு போனார்
நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம் அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று சொன்னார் , சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் , கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை தேய்த்து கொண்டு இருந்தான் , என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என் தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம் ஒன்றும் இல்லை . முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம் உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும் என்று ...