Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். வாகனத்தைபழுதை சீர் செய்வீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவருவீர். பழைய கடனை பைசல் செல்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: மனதில் ஒருவித கவலை, படபடப்பு வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னி: நீண்டநாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். புது வேலை கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலக ரீதியாக பயணங்கள் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அரசுக்காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக் கசப்புகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வரக்கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்டுவீர். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: உறவினர், பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.

  • 71