Feed Item
·
Added article

முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்தார். இதில் அவரது வலது பக்க இடுப்பு பகுதியில் உள்ள முக்கிய தசைநார் கிழிந்து 'காயமடைந்தார். இதனால் அவர் 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

என் வலது இடுப்பில் உள்ள ஒரு தசைநார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை தூக்க முடியவில்லை. அந்த தசைநார் மீண்டும் இணையும் வரை ஓய்வு தேவை. வலி இருக்கிறது, ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. நீயாக ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டாய், அதனால் நானே உனக்கு ஓய்வு தருகிறேன் என்று கடவுள் கொடுத்த ஓய்வு. இப்போது கட்டாய ஓய்வில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நான் நிறைய சாப்பிட்டு 'டெசர்ட் மான்ஸ்டர்' ஆகிவிடுவேனோ என்ற பயத்தில் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்கிறேன். நிறைய புதிர்களைத் தீர்த்து நேரத்தை கழித்து வருகிறேன். கவலைப்படாதீர்கள், விரைவில் மீண்டு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பாலர் வர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

  • 57