- நடிகை நதியா அக்டோபர் 24, 1966-இல் பிறந்தார்.
- நடிகை நதியாவின் இயற்பெயர் ஜெரினா மொய்டு.
- இவர் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார்.
- 1985-ல் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார்.
- 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
- பிரபு, சத்யராஜ், ரஜினி, விஜயகாந்த், சுரேஷ், மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
- இவரது ஸ்டைலான தோற்றமும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
- திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து 2004-ம் ஆண்டு ஜெயம் ரவியின் கியூட் அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் ஸ்ட்ராங் ரீ என்ட்ரி கம்பேக் கொடுத்தார்.
- 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது 2கே கிட்ஸ்களும் ரசிக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
- நடிகை நதியா 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
- நடிகை நதியாவிற்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்த நடிகை நதியா 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார்.