ஈழத் தமிழரும் கனடிய பிரஜையுமான பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.