Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

ரிஷபம்

மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பிறரை நம்பி எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மிதுனம்

சகோதரர்களால் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

 

எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் இணக்கம் ஏற்படும். வழக்கு பிரச்சனைகள் ஓரளவு குறையும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கன்னி

உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடங்கல் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

துலாம்

எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு

 

விருச்சிகம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

தனுசு

சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

மகரம்

தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

கும்பம்

பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மீனம்

சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

  • 247