Feed Item
·
Added a news

கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நபர் ஓருவர் தேடப்பட்டு வருவதாக நியூ பிரன்ஸ்விக்கின் செயின்ட் ஜான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான ஜேசன் பிட்ரே என்ற நபரையே பொலிஸார் இவ்வாறு தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் பிட்ரே சட்டரீதியான விடுதலையின் நிபந்தனைகளை மீறியதாக கூறப்படுவதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நிபந்தனையின் பிரகாரம் செயின்ட் ஜானில் உள்ள ஹார்ட் ஹவுஸ் சமூக குடியிருப்பு மையத்திற்கு அவர் திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்ரே தற்போது ஆயுதக் கொள்ளை மற்றும் கொள்ளையை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் செய்ததற்காக நான்கு ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பிட்ரே என்ற பெயருடைய அந்த நபர் ஐந்து அடி ஒன்பது அங்குல உயரமும், 230 பவுண்டு எடையும், நீல நிற கண்களும் கொண்டவர் என பொலிஸார் அங்கஅடையாளத்தை விவரித்துள்ளனர்.

  • 121