இயக்குனர் ஆர் சுந்தரராஜன் இயக்கத்தில் 'நான் பாடும் பாடல்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.
🌹பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர் சுந்தரராஜன். "எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்."
🌹உடனடியாக ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.
🌹கொஞ்சம் தயங்கினார் ஆர் சுந்தரராஜன். "அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே..!"
🌹"அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை வாங்கிக் கொள்ளுங்கள்." அந்த பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர் சுந்தரராஜன்.
🌹அடுத்த ஒரு சில நாட்களில்...
🌹கதை தயாரானது. அதுதான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஏ.வி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன். "நல்லா இருக்கு. ஹீரோ யார் ?"
'🌹விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும். படமும் பிரமாத வெற்றி பெறும்' என்றார் சுந்தரராஜன்.
🌹"விஜயகாந்தா ?
வேண்டாம். ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற 'நான் பாடும் பாடல்' படத்தில் சிவகுமார்தானே ஹீரோ ? வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்"
🌹ஆர் சுந்தரராஜன் உறுதியாகச் சொன்னார். "அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்."
🌹பொறுமையாக அதைக் கேட்ட ஏ.வி.எம். : "இல்லை. அதில் எங்களுக்கு சம்மதமில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடுங்கள்."
🌹ஆர் சுந்தரராஜன் திகைத்துப் போனார். ஏனெனில் ஏவிஎம் கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாகக் கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.
🌹என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர் சுந்தரராஜன். ஏவிஎம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது ?
🌹அன்று மாலை வாடிய முகத்தோடு வழக்கமான வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர். என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னார் ஆர் சுந்தரராஜன்.
"🌹இவ்வளவுதானே? இதற்குப் போய் ஏன் இப்படிக் கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்."
அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.
'🌹வைதேகி காத்திருந்தாள்' கதையை அவர்களிடம் ஆர் சுந்தரராஜன் சொல்ல...
உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர் சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட, அதை வாங்கி ஏவி எம்மிடம் கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர் சுந்தரராஜன்.
🌹தூயவன் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் தயாரிப்பாளர் ஆனார். வீடு வாங்க வேண்டும் என்றபோது அதற்கான பணத்தை உடனடியாக ஏவிஎம். மூலமாக கொடுத்தது இந்த பிரபஞ்சம்.
🌹அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக வேறு ஒரு தயாரிப்பாளரை தேடிக் கொடுத்ததும் அதே பிரபஞ்சம்.
🌹நமக்கு எப்போது எது தேவையோ அதை நம்மிடம் கொண்டுவந்து கொடுக்க ஏதாவது ஒரு வழியை இந்தப் பிரபஞ்சம் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது. ஆனால் அதன் சூட்சுமங்கள் நமக்கு எளிதில் புரிவதில்லை.
🌹ஆர். சுந்தரராஜனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது. அதற்குத் தேவை அசைக்க முடியாத தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மட்டுமே !