தமிழ்நாட்டில் - வேதாரண்யத்திற்கு பக்கத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சி.
அங்கு இருக்கிற பனை மரங்களையெல்லாம் அழித்து விட்டு தண்டவாளங்களைப் போடுகிறபோது, மக்கள் எல்லாம் இந்த பனை மரங்களை அழிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் கேட்கவில்லை. காரணம் எல்லா ஊர்களிலும் எதிர்ப்பு வரும், அப்படிப் பார்த்தால் அந்த பணியை நிறைவு செய்யமுடியாது. எனவே அந்த பனை மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்தனர்.
சில நாட்களுக்குப் பின்பு அந்த ஊரைச் சார்ந்த ஒரு பெரியவர் ஒரு காரியம் செய்திருக்கிறார். அந்தப் பனை மரங்களிலே இருந்து நுங்குகளையெல்லாம் எடுத்து, அந்த நுங்குகளுக்கெல்லாம் வெல்லம் சேர்த்து அங்கே வந்த அதிகாரிகளுக்கு அந்த வெல்லமும் நுங்கும் சேர்ந்த கலவையைக் கொடுத்திருக்கிறார். அதை உண்டு மகிழ்ந்த அவர்கள் அட்டா மிக அருமையாக இருக்கிறதே. இது என்ன என்று கேட்டிருக்கிறார்கள். நீங்கள் வெட்டுகிற பனை மரத்தினுடைய நுங்குதான் இது, அதனுடைய சுவைதான் இது என்று சொன்ன உடனே அவர்களுக்கே கொஞ்சம் மனம் இளகி, வேண்டாம்... இந்த தண்டவாளத்தை வேறு பாதையிலே போட்டுக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.