துக்க வீடுகளில் ஒரு நோட்டு பணம் எழுதுவார்கள். அதனை இங்கே மொய் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். அதன் உண்மையான காரணம் பணமுடை காரணமாக உதவுவது என்று இல்லை.
இறந்தவர்களின் உறவுக்காரர்கள் எத்தனை பேர் துக்க நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்? என்று கணக்கில் கொள்ளும் அட்டெண்டன்ஸ் வழிமுறை.
இதில் 16 அல்லது 30 நாட்கள் கழித்து பார்க்கும் சமயம் யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? ஏன் துக்க நிகழ்வை விலக்கினார்கள்? என்றெல்லாம் ஒரு விசாரணையாக எடுத்துக் கொள்ளப்படும்.
துக்க வீடுகளில் ஒரு நோட்டு போட்டு இறந்தவரின் உறவினர் அல்லது சமூகத் தலைவர் ஒரு நோட்டில் எழுதும் சமயம் (ரொம்பவும் இல்லை. பத்து ரூபாய் எழுதுவார்கள்). விருப்பப்பட்டவர்கள் சற்று அதிகமாக எழுதுவார்கள்.
இந்த பணத்தை கொண்டுதான்எரியூட்டல் அல்லது நல்லடக்கம் முடிந்தபின் சமரசத்திற்கு- சலவைத் தொழிலாளிக்கு -மருத்துவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்படும்..(மிகவும் ஏழ்மைப்பட்ட வீடுகளில் இந்த பணம் அவர்களுக்கு மிகவும் உதவும்!)
இந்தியா - தமிழ்நாட்டில் சாத்தூருக்கு அருகில் இருக்கும் இரண்டு கிராமங்களில் ஒரு வழக்கம் இன்றளவும் உண்டு. இந்த இரண்டு ஊர்களிலும் இன்றளவும் யாரேனும் இறந்து விட்டால் அந்த ஊர்காரர்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்ல மாட்டார்கள். அந்த துக்க நிகழ்வு அன்றைக்கு முடித்த பின் அடுத்த நாள் காலை தான் வேலைக்கு செல்லும் வழக்கம் உண்டு.