இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பல நாட்கள் தடைப்பட்ட வருமானம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பகள் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் சிறுசிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கன்னி
திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாடுகள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மகிழ்ச்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மனதளவில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். வரவேண்டிய சில வரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
மகரம்
பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மையை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நன்மை கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மீனம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் தெளிவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும் உத்தியோகத்தில் பொறுமை வேண்டும் புதுவிதமான கனவுகள் பிறக்கும் கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்