- காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
- இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
- சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
- நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
- ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
- மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
- வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
- வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
- கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
- பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
- பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
- சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
- நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
- வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
- கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
- உடல் உறுதிபெற செவ்வாழைப் பழம்.
- பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
- குளியலுக்கு நலுங்குமாவு.
