Feed Item
·
Added article

பாலிவுட்டில் 'துரந்தர்' படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற நடிகை சாரா அர்ஜுன், இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கும் RC17 படத்தில் கதாநாயகியாக அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது.

இந்த படம் ராம் சரண் - சுகுமார் கூட்டணியில் 'ரங்கஸ்தலம்' படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். 2018-ல் வெளியான ரங்கஸ்தலம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் என்ன மாயம் செய்யும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சாரா அர்ஜுன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழில் 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்தவர். தற்போது கிளாமராக போட்டோஷூட் நடத்தி வரும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என திரையுலகினர் கூறுகின்றனர்.

  • 103