Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகள் மிதமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

ரிஷபம்

வியாபார பணிகளில் நெருக்கடிகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மற்றவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

கடகம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கற்பித்தல் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

சிம்மம்

கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்

கன்னி

மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிற்கல்வி சார்ந்த செயல்களில் உள்ள குழப்பங்கள் குறையும். அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

துலாம்

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விருச்சிகம்

வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். நிதானமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவுகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

மகரம்

அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத திடீர் தன வரவுகள் சிலருக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கும்பம்

சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வருமான வாய்ப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் லாபம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். நாவல் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மீனம்

அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

  • 61