Feed Item
·
Added article

‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன், “எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் கடினமான முடிவு, குறிப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படத்துக்காக எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை அறிகிறோம்.

இந்த ஏமாற்றத்துக்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலையை விரைவில் சரி செய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் அன்பு, பொறுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்குத் தேவை. இந்த காத்திருப்புக்கு ‘வா வாத்தியார்’ தகுதியானதே” என்று தெரிவித்துள்ளார்கள்.

  • 66