பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் பெரும் அலைகளும் புயலும் சேர்ந்து வருவதால் ஸ்குவாமிஷ் பகுதியில் உள்ளூர் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அலை மிக உயரமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், மணல் மூட்டைகளால் அணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.