*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.
*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.
*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நல்ல தூக்கம் வரும்.
*அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள, தலைநோய், கண் புகைதல் ஒழியும்.
*அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி, சிரங்கு, படர் தாமரை சரியாகும்.
*அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.
*ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈறுப்புண் குணமாகும்.
*ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.
*இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.
*உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை, தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
*உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும் உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.
