Feed Item
·
Added a post

என்னடி செஞ்சு வச்சி இருக்கே நைட் சாப்பிடுவதற்கு. ….

நாலு சப்பாத்தி மட்டும் இருக்கு போய் சாப்பிடுங்க …..

வேற தொ ட்டு கொள்ள என்ன செஞ்ச……

ஒன்னும்இல்ல…வெறும் சப்பாத்திதான்……

.உருளைக்கிழங்கு மசாலா…. செய்யலாமே ……

அதுவெல்லாம் இல்லே…..

பழைய குழம்பு…எதுவும் இல்லையா…..

இல்லை…இல்லை……

ஏன் கத்தரே… முந்தா நாள் வைச்சபழைய மீன் குழம்பு இருக்குதா……. பிரிட்ஜ்லே பாருடி……

அதுவும் இல்ல…பேசாமே போங்க……

வேலைக்கு போன மனுஷன் ராத்திரி வெறும் சப்பாத்தியை யா….தின்னுட்டு படுப்பான்…. என்னடி வேலை செய்ற….ரசம் இருந்தா ஊத்து….,.

ஆமா…..நீங்க கொடுக்கிற இருபதாயிரம் ரூபாய்ல எல்லாம் வந்துருமா …?வாடகை,சாப்பாடு செலவு.. ..,,காய்கறிகள்.. மளிகை சாமான்கள்… எல்லாம் வாங்கணும் இந்த காலத்தில் போதுமா….?சம்பளத்தை ஏற்றி கொடுக்கிறது…

அடிப்பாவி நான் மட்டும் சும்மாவா இருக்கறேன் பசங்க ஸ்கூல் பீஸ்…காலேஜ்பீஸ் டிரஸ்…. கேஸ்.. அது இதுன்னு….எல்லாம் செய்ய வேண்டாம்….போடிஎதுவும் வேணாம்…. சும்மாவே படுத்துக் கொள்கிறேன்……

சரி சரி… உள்ளே போங்க, கால் கிலோ மட்டன் வாங்கி குருமாசெஞ்சுவெச்சிருக்கேன்….போய் நிம்மதியா சாப்பிடுங்க ஓகேவா……

எப்படிடி மனசு வந்தது உன்ன போல பொண்டாட்டி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்டி ரொம்ப தேங்க்ஸ்……

நான்மட்டும்என்னவாம்..உங்க பிறந்தநாள் கூட உங்களுக்கு ஞாபகம் இல்லாம,வேலைக்கு போயிட்டு வர புருஷனுக்கு இது கூட செய்யலைன்னா நான் ஒரு நல்ல மனைவியே இல்லைங்க…. கை கால் கழுவிட்டு வந்து நிம்மதியா போய் சாப்பிடுங்க சார்….

  • 22