நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ மற்றும் முன்னணி இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் திருமணம், கோவாவில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் பிரம்மாண்டமாகவும் அதேசமயம் எளிமையாகவும் நடந்து முடிந்தது. மணமக்களின் விருப்பப்படி மிகவும் எளிமையாக, நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் நெகிழ்ச்சியான, எமோஷனலான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு குஷ்பூ குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, மணமகன் ஸ்ரவண், அவந்திகாவின் கழுத்தில் தாலி கட்டும் அந்த நொடியில், குஷ்பூ உணர்ச்சிப் பெருக்கால் கைகளைக் கூப்பி கும்பிட்டபடியே ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார். அருகில் நிற்கும் கணவர் சுந்தர் சி-யும், ஆர்த்தி ரவியும், இளைய மகள் அனந்திதாவும் குஷ்பூவைத் தேற்றினார்கள். இந்த எமோஷனல் வீடியோ ரசிகர்களின் இதயத்தை தொட்டது. ஒரு தாய்க்கு தான் தனது மகளின் கழுத்தில் தாலி ஏறும் போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கும் அந்த மகிழ்ச்சயின் வெளிப்பாடு தான் குஷ்பு கண்ணில் இருந்து வந்த ஆனந்த் கண்ணீர்.
திருமணம் முடிந்த கையோடு திருமண போட்டோவை பகிர்ந்து தனது மகளுக்கு திருமணதை அனைவருக்கும் அறிவித்தார். அந்த பதிவில், ஒரு பெற்றோராக எங்கள் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவந்திகா - ஸ்ரவண் விருப்பப்படியே இந்தத் திருமணம் மிக நெருக்கமானவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. வாழ்க்கையின் மிகச் சிறந்த நினைவுகள் நம் அன்பானவர்களுடன் இருக்கும் போதுதான் உருவாகிறது என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.
குஷ்புவின் மகளுக்கு பலரும் வாழ்த்து சொல்லிய நிலையில் ஒரு சில விஷமிகள் கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில், குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மகளின் திருமணப் போட்டோவை பகிர்வது சரியில்லை என்றும், திருமணப் போட்டோக்களைப் போட எப்படி மனசு வருகிறது? என்று விமர்வித்தனர். இந்த விமர்சனங்களால் ஆத்திரமடைந்த குஷ்பூ, என் மகளின் திருமணம் நடந்து 48 மணி நேரம் கூட இன்னும் முழுமையாக முடியவில்லை. என் குடும்பத்தின் மிக முக்கியமான ஒரு மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஒருத்தரின் மரணத்திற்கு மரியாதை கொடுப்பது என்பது வேறு, அதற்காகத் தன் சொந்த மகளின் திருமணக் கொண்டாட்டத்தையே நிறுத்தச் சொல்வது முட்டாள்தனம் என சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.