Feed Item
·
Added a post

ஒரு முதியவர் நர்ஸிடம்,

“எனக்கு கொஞ்சம் அவசரம் இருக்கிறது… தயவு செய்து என்னை சீக்கிரம் பார்த்து டாக்டரிடம் அனுப்ப முடியுமா?” என்றார்.

அதை கேட்ட நர்ஸ் கொஞ்சம் கோபமாக, “அங்கே உட்காருங்கள்,” என்று சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் வந்தபோது, அந்த முதியவர் கதவின் அருகில் இருந்து வேண்டிக் கொண்டார்.

நர்ஸ் எதிர்த்தாலும், டாக்டருக்கு கருணை வந்ததால் அவரை உள்ளே அழைத்தார்.

அவரை பரிசோதிக்கும் போது, விழுந்ததும், காயம் ஏற்பட்டதும், ரத்தம் வந்ததும் எல்லாம் அவர் சொன்னார்.

டாக்டர் காயத்தை சுத்தம் செய்து தையல் போட்டார்.

போகும் நேரத்தில் டாக்டர் கேட்டார்:

“ஏன் இவ்வளவு அவசரம்?”

முதியவர் சொன்னார்:

“என் மனைவிக்கு உடல் நலம் இல்லை… அவளுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்.”

டாக்டர் கேட்டார்:

“என்ன நோய்?”

“அல்சைமர்…” என்று அவர் பதிலளித்தார்.

சிறிது ஆச்சரியத்துடன் டாக்டர் மீண்டும் கேட்டார்:

“அல்சைமர் இருந்தால், நீங்கள் போகவில்லை என்றால் அவங்களுக்கு நினைவில் இருக்குமா?”

அப்போது முதியவர் சிரித்துக் கொண்டு சொன்னார்:

“வாக்கு கொடுத்தது நான்தானே… அதை நினைவில் வைத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டியது நான்தானே…

அவளுக்கு நோய் இல்லாத காலத்திலும், நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவள் என்னை பின்தொடர வேண்டிய அவசியம் இருந்ததில்லை…

நீங்கள் நினைவைக் குறித்து கேட்டீர்கள் அல்லவா…

கடந்த ஐந்து வருடங்களாக அவள் என்னை அடையாளம் காணவில்லை…

ஆனால், அவள் யார் என்று எனக்குத் தெரியும்… அதனால் நான் தானே போக வேண்டும்.” என்றாராம்.

  • 32