டிரெயின் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து இயக்குனர் மிஷ்கின் அவரை உலகத் தர நடிகர் என்று புகழ்ந்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் நாசர், சுருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரயில் பயணத்தில் நடக்கும் பரபரப்பான கதையை இந்தப் படம் சொல்லும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.