ஏங்க…. இந்த லாட்ஜுக்கு புதுசா வேலைக்கு சேர வந்தீங்களா…..
ஆமா சார்….ரூம் பாய் வேலைக்குஇன்டெர்வியூக்கு வந்து இருக்கேன்….. அதுசரி…..உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்குதே…. உங்க பேரு சேகர் தானே….
அட ஆமாங்க……எட்டாவது வரை என் கூட கார்பரேஷன் ஸ்கூல்லே ஒண்ணா படிச்ச குமாரு தானே நீங்க..
இனி என்னடா.. வாங்க போங்கன்னு நமக்குள்ள மரியாதை…..
சரிடா… இந்த லாட்ஜ்ஜை பத்தி நெறைய சொல்லவேண்டிஇருக்கு.. கவனமா கேளு….. உனக்கு உதவும்…..
அப்படியா சொல்லுடா ….
இது நீ நினைக்கிறாமாதிரி லாட்ஜ் இல்லை….. இது ஒரு மர்ம மாளிகை…. இரவு நேரத்தில் மோகினி பேய்கள் நடமாடும்……வித்தியாசமான சப்தம்எல்லாம் கேட்கும்…..
கேக்கவே பயங்கரமாஇருக்குதே…… ஆமா இதுவெல்லாம் உனக்கெப்படி தெரியும்…..
ஆறு மாசம் இங்கு தானே ரூம் பாய் வேலை செஞ்சேன்……அதனாலே தெரியும்…..இதனாலேயே வேலையை விட்டு பயந்து போய் நின்னுட்டேன்
சரி……. மோகினி பேயை நீ கண்ணால் பார்த்து இருக்கிறியா…..
சொன்னால் கேளுடா…..காலே இல்லாமே வெள்ளையா இருக்கும்டா….மொட்டை மாடிக்கு போனா கீழே தள்ளி விடும்…..
சரி…. சொல்லு…. மோகினி சரி….. பூதம் ஒண்ணு கீழே நாலாம் நம்பர் ரூமுலே இருந்ததாமே…. அது ரூமை விட்டு காலி பண்ணும் போது ஐய்யாயிரம் ரூபாயை பர்சோட மிஸ்பண்ணிட்டு போயிடுச்சாம்…, அதைஇங்கே ரூம் பாயா இருந்த ரெண்டு கால் பிசாசு ஒண்ணு எடுத்து வைச்சிகினு இல்லவே இல்லை…… நான் எடுக்கலைன்னு…. சாதிச்சி இன்னிக்கி வேலை போயி.. நடு தெருவுலே நிக்குதாம்…
அதுநான்தாண்டா……..உனக்கெப்படிடாதெரியும்…..
எங்க மாமா தாண்டா இங்கே மேனேஜர்… அதோ உட்கார்ந்து இருக்காரு பாரு…..அவர் தான்
இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்டாஉன் மாமா கிட்ட சொல்லி வேலை வாங்கி கொடுடா பிளீஸ்….
சரி வா……இனிமே மத்தவங்க பொருளுக்கு ஆசை படாதே……இது போல கதையும்விடாதே…..