Feed Item
·
Added article

ரஜினிகாந்த்தை வைத்து கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் சுந்தர். அவரது இந்த முடிவு அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் விலகியதால் அடுத்ததாக இப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து வித்தைகளை கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்தடுத்து அவர் இயக்கிய மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டாகின.

இதன் காரணமாக கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அவரது படங்கள் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும்படியான விஷயங்கள், நகைச்சுவைகள் இருந்ததால் அவர் படத்துக்கு சென்றால் அனைத்தையும் மறந்துவிட்டு சிரித்துவிட்டு வரலாம் என்ற இமேஜ் உருவாகிவிட்டது. மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்கூட சுந்தர்.சியின் படம் ரிலீஸாகிவிட்டால் தவறாமல் குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர். சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததுதான் காரணம் என்றும்; இல்லை இல்லை ரஜினி சொன்ன சில விஷயங்கள் சுந்தருக்கு ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் என்று ஆள் ஆளுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் பற்றி சுந்தர். சி கொடுத்த பழைய பேட்டி ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

பேட்டியில் சுந்தர். சி, "அருணாச்சலம் கதைக்கான ஒன்லைனை ரஜினி என்னிடம் சொன்னபோது அது எனக்குப் பிடிக்கவில்லை. அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்கும் அவர் திறனுக்கும் இது போதாது என நினைத்தேன், ஆனால் அவர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்று இயக்குநர்கள் சொன்னால் அவர் கதையை மாற்ற மாட்டார்.. இயக்குநரை மாற்றுவார் என தெரியும். எனவே அதற்கு ஓகே சொல்லி அதை மெருகேற்றினேன்" என்று கூறியிருக்கிறார்.

  • 94