இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். சுபகாரிய தொடர்பான அலைச்சல் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
ரிஷபம்
கணவன்-மனைவியிடையே விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிதுனம்
சுபகாரிய விரயங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மீகக் காரியங்களால் மன அமைதி அடைவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீகச் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
எதிர்கால தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனை தீரும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரப் பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
தனுசு
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
சகோதரர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்படக்கூடும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பங்குதாரர்களால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்கின்ற முயற்சியில் அலைச்சல் இருந்தாலும் புதிய ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வாழ்க்கையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு