Feed Item
·
Added article

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து புகழடைந்த கனகா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை நிலைகுலைய செய்ய சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார். பல வருடங்கள் தனிமையிலேயே இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான தேவிகாவின் மகள் கனகா. அவரை கங்கை அமரன் தனது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கனகாவின் நடிப்பு முதல் படம் போன்றே இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார் அவர்.

குட்டி பத்மினிக்கு பிறகு பலர் கனகாவை சந்திக்க முயன்றாலும் அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும் கனகாவை பேட்டி எடுப்பதாகவும்; விரைவில் அது தனது யூடியூப் சேனலில் வரும் என்றும் பத்மினி கூறியிருந்தார். ஆனால் அவரோ பேட்டி கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக நின்றுவிட்டார். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்திய பேட்டியில் கனகா குறித்து பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பாலாஜி பிரபு அளித்த அந்தப் பேட்டியில், "கனகாவை பொறுத்தவரை அவரது அம்மா அருகே இல்லையென்றால் பேசுவதற்குகூட பயப்படுவார். அவரது அம்மா இறந்த பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு ஆள் சப்போர்ட்டில் வாழ்ந்தாலே இந்தப் பிரச்னை வரத்தான் செய்யும். பலருடன் பழக வேண்டும். நிறைய நண்பர்களை அருகே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாம் இருந்தால் கஷ்டம் கொஞ்சம் குறையும். யாருமே அருகே இல்லாததால் இடிந்து போய்விட்டார். கனகாவின் தாயும், தந்தையும் பேசிக்கொள்வதில்லை.

இருப்பினும் சொத்தில் தனக்கு பங்கு வேண்டுமென்று கனகாவின் தந்தை வழக்கு தொடுத்திருந்தார். தேவிகா இருக்கும்வரை அந்த வழக்கை நடத்திக்கொண்டிருந்தார். பிறகு கனகா சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவர் கோர்ட்டில் அமர்ந்திருக்கும்போது அவர் அருகே ஒரு பெரியவர் அமர்ந்து எப்படி ம்மா இருக்க என்று கேட்டார். இவர் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறேன் என சொன்னார். அந்த நபர்தான் அவரது அப்பா. அப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும்" என்றார்.

  • 58