Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் தேடி வருவர். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரம் சிறக்கும்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். அரசு தொடர்புடைய நபர்களை சந்திப்பீர். நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் உதவி நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது சரக்குகள் வந்திறங்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

சிம்மம்: உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரக் கூடும். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் திணறுவீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த பகை விலகும். பிள்ளைகளின் பாசம் கூடும். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சமயோஜிதமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த உதவி கிட்டும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.

தனுசு: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். வீட்டை விரிவுபடுத்துவீர். பழைய நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமொழி, மதத்தவர் உதவுவர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். பயணங்கள் அலைச்சல் தரும்.

கும்பம்: வேலை தேடி அலைந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர் களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

  • 36