Feed Item
·
Added article

மலை​யாள இயக்​குநர் மாதவ் ரமா தாசன் இயக்​கி​யுள்ள திரைப்​படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்​செல்​வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்​துள்ளார்.

பிப்​.27-ல் வெளி​யாகும் இந்​தப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் தென்​னிந்​திய திரைப்பட வர்த்தக சபையின் தலை​வர் ரவி கொட்​டாரக்​க​ரா, இயக்குநர் உதய சங்​கரன், விநி​யோகஸ்​தர்​கள் அப்​பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

நடிகர் சரத்​கு​மார் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் கதை மீன்​பிடி படகு ஒன்​றில் நடை​பெறுகிறது. பெரும்​பாலும் கடல்தான் திரைக்​கதை​யில் இருக்​கிறது. இதை எப்​படி நீங்கள் திரை​யில் காட்சிப்படுத்​து​ வீர்​கள் என இயக்குநரிடம் கேட்​டேன்.

அது குறித்து முழு​மை​யாக திட்​ட​மிட்​டிருக்​கிறோம் என சொன்​னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்​பணிப்பு எனக்​குத் தெரிந்​தது. ஒரு மீன்​பிடி கப்​பல் ஒன்றை அரங்கத்துக்​குள் உரு​வாக்​கி, அதனை இயக்​கு​வதற்​காக ஹைட்ராலிக் தொழில் நுட்​பத்​தை​யும் பயன்​படுத்​தினார்.

இந்​தப் படத்​தின் கிளிம்ப்ஸை பார்க்​கும் போது நான் நெகட்​டிவ் கேரக்​டரில் நடித்​திருப்​பது தெரி​யும். நெகட்​டிவ் கேரக்​டருக்கு தான் இன்று வரவேற்பு இருக்​கிறது. இன்று கதா​நாயகன் என்று சொன்​னால் நல்​ல​வ​னாக இருந்​தால் மட்​டும் கதா​நாயகன் ஆக முடி​யாது. இப்போதெல்லாம் தப்பு செய்​பவர்​தான் கதா​நாய கன்.‌ புஷ்பா படத்​தில் ஹீரோ செம்​மரம் கடத்​துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் காலங்​கள் மாறி​விட்​டன. இன்​றைக்கு வித்​தி​யாசம் தேவைப்​படு​கிறது” என்​றார்​.

  • 22