இலங்கையில் தித்வா ( ditwah ) சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி (88) , நுவரெலியா (75) , பதுளை (71), குருநாகலை (37) , மாத்தளை (23) மற்றும் கேகாலை (12) ஆகிய பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.