Feed Item
·
Added article

நடிகை ஸ்ருதிஹாசன், துல்​கர் சல்​மான் ஜோடி​யாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். தெலுங்​கில் உரு​வாகும் இப்​படம் தமிழ் உள்​ளிட்ட 5 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இப்​படத்​திலிருந்து அவருடைய தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

ஸ்ருதிஹாசன் அளித்த பேட்​டி​யில் கூறியிருப்பதாவது: பாடு​வது, இசையமைப்​பது, எழுது​வது, நடிப்பு ஆகிய துறை​களில் நான் சென்று கொண்டிருக்கிறேன். இதற்​கு கலைகளில் பல்வேறு திறமை கொண்ட பெற்​றோருடன் வளர்ந்​தது காரணம். நான் வளர்ந்த சூழல் எனக்கு அதைத் தந்​திருக்​கிறது. நான் விரும்​பிய விஷ​யங்​களைச் செய்ய அனு​மதி வழங்​கியது.

2018-ல் நடிப்​பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்​துக் கொண்​டது பற்றி கேட்​கிறார்​கள். அந்த இடைவெளி,​ நான் யார் என்​பதை மறும​திப்​பீடு செய்​து, என்னை நானே ஆராய்​வதற்​கான நேர​மாக இருந்​தது. சில மனநலப் பிரச்சினை​களுக்​காக​வும் நேரம் எடுத்​துக்​கொண்​டேன்.

நான் பல ஆண்​டு​களாகக் கடுமை​யான பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன். அந்த பதற்​றத்​துடன் அன்​றாட நடவடிக்​கைகளைத் தொடர முடிய​வில்​லை. நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை. அந்த இடைவெளி​யில், லண்​டனில் இருந்​தேன். அங்கு இசை​யின் மூலம் என்னை நான் மீண்​டும் கண்​டறிந்​தேன்.

தின​மும் என் உடைகளை நானே துவைப்​பது, எனக்​கான உணவை நானே சமைப்​பது, மெட்ரோ ரயி​லில் பயணிப்​பது, திரும்பி வந்து புதி​தாக எழுதப் பயிற்சி செய்​வது, பின்​னர் எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் அந்த இசையைச் சோதித்​துப் பார்ப்​பது என என் வாழ்க்​கையை அமைத்​திருந்​தேன்.

இப்​போது ஒரு கலைஞ​ராக இருப்​பதை மிக​வும் விரும்​பு​கிறேன். அது மகிழ்ச்​சி​யைத் தரு​கிறது. வழக்​க​மான கதா​பாத்​திரங்​களை விடுத்து சவாலான வேடங்​களில் நடிக்​க​வும் ஆர்​வ​மாக இருக்​கிறேன். இவ்​வாறு ஸ்ரு​திஹாசன் கூறி​னார்.

  • 69