ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.

சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஏற்கனவே கிரிவலம் எல்லாம் சென்று தனது பக்தியை வெளிப்படுத்திய நிலையில், சமீப காலமாக தொடர்ந்து சாமியார்களை சந்தித்து வருகிறார்.
தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து ரசிகர்களை அப்போதே கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. விஜய் சேதுபதி ஜோடியாக சூது கவ்வும் படத்தில் நடித்து வேறலெவலில் பிரபலமானார். பிட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, வினோதய சித்தம், பஹீரா, பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீப காலமாக பயபக்தியாக மாறியுள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது, சாமியார்களை சந்திப்பதாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஹோம்லி லுக்கில் சுடிதார் மற்றும் சேலை அணிந்தே போட்டோக்களை போட்டு வருகிறார்.