ராமாயணம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சாய் பல்லவி தனது சக நடிகர் ரன்பீர் கபூர் தமிழ் படங்களை தொடர்ந்து பார்ப்பதாக பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் தான் பார்க்காத புதிய தமிழ் படத்தை கூட ரன்பீர் பார்த்து விட்டு கேட்பதாக சாய் பல்லவி கூறினார். அமரன் படத்தை பார்த்து விவாதித்தோம், மகாராஜா, பத்தா போன்ற படங்களையும் தொடர்ந்து பார்க்கிறார் என அவர் தெரிவித்தார்.
ராமாயணம் படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார், ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரன்பீர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5, 2026 அன்று வெளியாக உள்ளது. சீதை தோற்றத்தில் சாய் பல்லவியின் அழகு ரசிகர்களை கவர்ந்துள்ளது.