Feed Item
·
Added a post

ஒரு தத்துவவாதிக்கு மூன்று பையன்கள் இருந்தார்கள். அவர் அந்த மூன்று பையன்களுக்கும் அர்த்தம் உள்ள பெயர்களை வைத்திருந்தார்.

அதாவது ஒருவன் பெயர் மேனஸ் (Manners) நல்ல பழக்க வழக்கங்களை உடையவன்.

இரண்டாவது பையன் பெயர் ட்ரபுல்ஸ் (Troubles) தொந்தரவு என்று அர்த்தம்.

மூன்றாவது பையன் பெயர். மைண்ட் யுவர் ஓன் பிசினஸ் (Mind your own business) உன் வேலையை பார்த்துக் கொண்டு செல் என்று அர்த்தம்.

இப்பொழுது இந்த அர்த்தம் உள்ள பெயர்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை கவனியுங்கள்.

ட்ரபுல்ஸ் என்ற பையனை காணவில்லை.

ஆகவே மேனஸும் மைண்ட் யுவர் ஓன் பிஸ்னஸ் என்ற பையனும் காவல் நிலையத்துக்குச் சென்றார்கள்.

அங்கு சென்றதும் மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் மேனஸிடம் நீ கொஞ்சம் வெளியே இரு என்று சொல்லிவிட்டு காவல் நிலையத்துக்குள் சென்றான்.

உள்ளே உட்கார்ந்து இருந்த போலீஸ்காரரிடம் என்னுடைய தம்பி காணாமல் போய்விட்டான் என்று புகார் கூறினான்.

அதற்கு போலீஸ்காரர் உன்னுடைய பெயர் என்ன? என்று கேட்டார்

மைன்ட் யுவர் ஓன் பிசினஸ் என்றான் இவன்.

அந்த போலீஸ்காரன் எரிச்சல் அடைந்து உன்னுடைய நல்ல பழக்கங்கள் எங்கே போயிற்று என்ற அர்த்தத்தில் வேர் இஸ் யுவர் மேனஸ்?

என்று கோபமாக கேட்டார்.

அவன் வாசலுக்கு வெளியே நிற்கிறான் என்றான்.

நீ ஏதாவது தொந்தரவு கொடுக்க வந்திருக்கிறாயா என்ற அர்த்தத்தில் ஆர் யூ லுக்கிங் பார் ட்ரபுல்ஸ்? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

ஆமாம் அவனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டான் இவன்.

பின்னர் போலீஸ்காரரின் நிலையை சொல்லவும் வேண்டுமோ???

  • 23