திரு.சுகி சிவம் ஐயா சொன்ன, மேடை பேச்சு செய்தி.
ஒருவர் ஒரு ஊருக்கு சில வேலையா போனார். அங்கு அவருடைய நண்பர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து விட்டு போகலாம்னு தோணித்து. உடனே ஏதாவது பழம் வாங்கிகிட்டு போகலாம்னு கைவண்டில பழம் விக்கிறவர் கிட்ட போனாரு.
ஆப்பிள் பழம் நல்லா இருந்தது. என்ன விலைன்னு கேட்டாரு. கடைக்காரர் ₹200.00 ஒரு கிலோன்னு சொன்னாரு. கொஞ்சம் விலை குறைச்சு கொடுப்பீர்களா? ₹180.00 க்கு தரேன். வாங்கிகிட்டு ₹200.00 தாளை கொடுத்தார். கடைக்காரர் சரியாய் மீதி ₹20.00 கொடுக்கும் போது ஒருவர் பிச்சை போடுங்கன்னு கையை நீட்டினார்.
கையில் ₹20.00 நோட்டு என்ன செய்ய. வேற வழி இல்லை அப்படியே அந்த மீதி காசை பிச்சை காரருக்கு கொடுத்துவிட்டார்.
அப்பறம் நடந்தது தான் சுவாரசியம். அப்பபார்த்து அந்த கடைக்காரர் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சார். ஏன் சிரிக்கிறீங்க?
எங்கிட்ட பேரம் பேசினீங்க.எனக்கு வர வேண்டிய காசு, அவருக்கு பிச்சை. ஆனா இதில் என்ன விஷயம் என்றால், என் கடை அவரு கிட்ட கடன் வாங்கி தான் நடக்குது.