நடிகை ஷாலினி பகிர்ந்து கொண்டது....
“இந்த படம் கே.ஆர்.விஜயாம்மாவின் தங்கை கல்யாணத்தப்ப எடுத்தது. அரசியல்வாதிகளும் சினிமா ஆட்களும் எம்.ஜி.ஆரிடம் நெருங்கவே தயங்கிய நேரம். நான் நேராகப் போய் அவர் கழுத்தில் ஒரு சந்தன மாலையைப் போட்டேன். என்னை இழுத்து அணைச்சு என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ரொம்ப நைஸா அவர்கிட்ட ‘உங்க பேர் என்ன?’னு கேட்டேன். சிரிச்சிக்கிட்டே “எம்.ஜி.ஆர்”னு சொன்னார். “அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?”னு மறுபடி கேட்டேன். இன்னும் பலமா சிரிச்சார். பிறகு எம்.ஜி.ராமச்சந்திரன்னு அழுத்தமாச் சொன்னார்.
“அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்டேன். மறுபடியும் பலமாகச் சிரிச்சார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை.
அவரோட இறுதி ஊர்வலத்தின் போது திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்த போதுதான் அவரது புகழின் முழுப் பரிமாணமும் எனக்கு புரிஞ்சது. எம்.ஜி.ஆர் சார் என்னை அணைச்சுக் கொஞ்சினப்போ போட்டிருந்த பிங்க் கலர் கவுனை இன்னும் நினைவுப் பொருளா பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன்” என்கிறார் நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி.
