ஒரு முறை நடிகவேள் M R ராதா தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்
அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய்
ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது.
இதைப் பார்த்த நடிக வேள் M R ராதா சிரித்தார்
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் " என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
அதற்கு அவர் மிகவும் சாந்தமாக,
அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது "
என்று சிரித்துக் கொண்டே கூறினார்
கேள்வி கேட்டவர் இப்படி
ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்ல
இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.
ஏன் என்றால் அந்த நாய்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப
அது சொன்னதையே செய்யும். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள்.
கார் அழுக்கானால் கழுவினால சுத்தம் ஆகிவிடும். ஆனால் கோபப்பட்ட நம்ம மனசு அழுக்காகும். எப்ப பார்த்தாலும் அந்த நாயை கல்லெடுத்து அடிக்கலாமே என்ற
எண்ணம் வரும்.அது நமக்கு நல்லதல்ல.
இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள் நீங்கள் செயல் வீரராக இருங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள்.
எத்தனையோ பிரச்னைகள் நீங்கும்.