மேஷம்
சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறு துர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதரர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
மனதளவில் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதார தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
சிம்மம்
மனதில் இருந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபங்கள் மேம்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
துலாம்
இழுபறியான சுப காரியம் பேச்சுகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அளவுடன் இருக்கவும். எதிலும் பெறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
மனதளவில் இருந்த கவலைகள் மறையும். சுப காரிய எண்ணங்கள் கைவிடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகரம்
சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கும்பம்
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும் உயர்கல்வியில் தெளிவுகள் ஏற்படும் நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள் வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும் உத்தியோகத்தில் பொறுமை வேண்டும் புதுவிதமான கனவுகள் பிறக்கும் கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்