காதலுக்காகக் கிரீடத்தைத் துறந்த புதுக்கோட்டை ராஜா.
இது ஒரு சோக காதல் கதை
சினிமாவுல கூட பார்க்க முடியாத ஒரு மிரட்டலான காதல் கதை இது. 1915-ல ஆரம்பிச்ச இந்தக் கதை, நம்ம தமிழ்நாட்டுப் புதுக்கோட்டைக்கும், ஏழு கடல் தாண்டி இருக்கிற ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒரு உணர்ச்சிகரமான பந்தம். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், அந்த காலத்திலேயே ரொம்ப ஸ்டைலானவர், உலக அறிவும் நவீன சிந்தனையும் கொண்டவர். அப்போதெல்லாம் ஆஸ்திரேலியாவுக்குப் போறது லேசுப்பட்ட விஷயம் இல்லை. "Whites Only" (வெள்ளையர்களுக்கு மட்டுமே) என்கிற கடுமையான இனவெறிச் சட்டம் அங்கே அமலில் இருந்தது. ஆனா, நம்ம ராஜாவோட ஆளுமைக்கும், அந்தஸ்துக்கும் முன்னாடி அந்தச் சட்டமெல்லாம் மண்டியிட்டுச்சு. அவருக்கு மட்டும் சிறப்பு அனுமதி கிடைச்சது.
சிட்னிக்கு டூர் போன ராஜா, அங்கே மோலி என்கிற அந்த ஆஸ்திரேலிய அழகியைச் சந்திக்கிறாரு. பார்த்தவுடனேயே காதல் பத்திக்கிச்சு. மோலியும் ராஜாவோட அந்த அறிவையும், மிடுக்கையும் பார்த்து மனசைப் பறி கொடுத்தாங்க. 1915-ல மெல்போர்ன்ல வச்சு இவங்க கல்யாணம் முடிஞ்சுது. ஆனா, இந்தக் கல்யாணத்தை அந்த நாட்டுப் பத்திரிகைகள் தாங்கிக்கவே முடியல. "நம்ம ஊரு வெள்ளையினத்துப் பொண்ணு எப்படி ஒரு இந்திய ராஜாவைக் கல்யாணம் பண்ணலாம்?"னு விஷத்தைக் கக்குனாங்க. "புதுக்கோட்டைங்கிறது இந்தியாவோட கால் கட்டை விரல் நகம் மாதிரி இருக்குற ஒரு சின்ன இடம், அங்கே இருக்குற ராஜாவுக்கு இவ்வளவு தைரியமா?"ன்னு ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஆனா, இதையெல்லாம் விடப் பெரிய இடி லண்டன்ல இருந்து வந்துச்சு.
பிரிட்டிஷ் அரசாங்கமும், ஜார்ஜ் மன்னரும் இந்தக் கல்யாணத்தை அங்கீகரிக்கவே மாட்டோம்னு ஒத்தைக்காலுல நின்னாங்க. "மோலியை ராணின்னு சொல்லக்கூடாது, அவங்களுக்கு எந்த அரசு மரியாதையும் கிடையாது, 11 குண்டு முழக்க மரியாதையும் ரத்து"ன்னு உத்தரவு போட்டு, ராஜாவை ஒரு வழி பண்ணிட்டாங்க. ஆனா ராஜா எதற்கும் அசரல. 1915 டிசம்பர்ல மோலியைத் தன் ஊரான புதுக்கோட்டைக்கு அழைச்சுட்டு வந்தாரு. நம்ம ஊர் மக்கள் எல்லாம் அவங்களை ஒரு மகாராணி மாதிரி அன்போடு வரவேற்றாங்க. ஆனா, அந்த வெள்ளைக்கார அரசாங்கம் செஞ்ச வேலை இருக்கே, அது ரொம்பக் கொடுமை.
மோலி கர்ப்பமா இருந்தப்போ, அவங்களுக்குத் தர்ற கசாயத்துல அரளி இலையை அரைச்சு விஷம் வச்சுக் கொல்லப் பார்த்தாங்க. தன் மனைவியோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சதும் ராஜா பதறிப்போயிட்டாரு. அவங்களை ஊட்டியில பாதுகாப்பா வைக்கலாம்னு ஒரு வீடு வாங்கப் பார்த்தாரு, அதுக்கும் அந்த அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டுச்சு. "ஒண்ணு ராஜாவா இரு, இல்ல உன் பொண்டாட்டி கூட போ"ன்னு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. ராஜா யோசிக்கவே இல்லை. "என் பதவியும், நாடும் போனாப் போகுது, என் மனைவியும் அவங்க கௌரவமும்தான் முக்கியம்"னு சொல்லிட்டு, தன் வாரிசுக்குக் கிடைக்க வேண்டிய ராஜ பதவியையும் துறந்துட்டு, பென்ஷன் வாங்கிக்கிட்டு ஐரோப்பாவுக்கே போயிட்டாரு.
அங்கே அவங்களுக்கு 'மார்த்தாண்ட சிட்னி'ன்னு ஒரு மகன் பிறந்தான். ஆனா, அந்தப் பையனை வாரிசா ஏத்துக்க பிரிட்டிஷ் அரசு மறுத்துட்டாங்க. இதனாலேயே அந்தப் பையன் பிற்காலத்துல சில தப்பான வழிகளுக்குப் போய் ஜெயிலுக்கும் போயிருக்காரு. 1928-ல ராஜா திடீர்னு இறந்து போனப்போ, அவரோட உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கூட மோலிக்கு அனுமதி கிடைக்கல. லண்டன்லயே அவரைத் தகனம் பண்ணிச் சாம்பலை வச்சுட்டாங்க. மோலி அதுக்கப்புறம் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. உலகப்போர் சமயத்துல நியூயார்க்ல துணிக்கடையில வேலை பார்த்தாங்க. என்னதான் வறுமை வந்தாலும், ராஜாவுக்குத் துரோகம் செய்யாம, கடைசியில 1967-ல அவங்க இறந்தப்போ, அவங்க சாம்பலையும் லண்டன்ல ராஜா இருந்த இடத்திலேயே வச்சாங்க. சாகுற வரைக்கும் அந்த ஊர் ராணியா ஆக முடியலனாலும், காதலிச்ச கணவர் கூடவே போய்ச் சேர்ந்துட்டாங்க. ஒரு அழகான காதல், இனவெறிக்கும் அதிகாரத்துக்கும் பலியான கதை இது.