Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மற்றவர்களை சிபாரிசு செய்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

மிதுனம்

எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உறவினர்களின் வருகை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். முயற்சிகள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை குறையும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர்

 

கடகம்

இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். வியாபார அபிவிருத்தி விஷயங்களில் பொறுமையை கையாளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் மூலம் விரயங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் உபரி வருமானம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிப்படுத்தும் கருத்துக்களில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

துலாம்

அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். மற்றவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். பயணத்தின் பாதுகாப்பை அறிந்து மேற்கொள்ளவும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

விருச்சிகம்

தாய்மாமன் வழியில் புரிதல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதி இன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

தனுசு

அரசு வழியிலான செயல்களில் சில தாமதம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சஞ்சலம் உண்டாகும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மகரம்

கனிவான பேச்சுக்கள் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். காது தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கும்பம்

சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். பேச்சுகளுக்கு மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். பயணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மீனம்

சுப நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக விட்டுக் கொடுத்து செல்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் மனசாட்சியுடன் செயல்பட தொடங்குவீர்கள். எதிர்பாராத சிலருடைய சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

  • 185