நடிகர் முத்துக்காளை தனது 58-வது வயதில் மூன்றாவது பட்டம் பெற்றுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஏற்கனவே 2017-ல் வரலாற்றிலும், 2019-ல் தமிழில் முதுகலை பட்டமும் பெற்றிருந்தார்.
மது பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு கல்வியில் கவனம் செலுத்தியதாகவும், படிக்க வயது தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.