இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சேவை பணிகளில் அனுகூலம் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தொழில் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தூரதேசப் பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம்
பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளை விற்பனை செய்வதில் மூலம் லாபம் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இடமாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
மறைமுகமான செயல்களில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமைகள் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உதவிகள் மூலம் லாபங்கள் மேம்படும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
வரவுக்கேற்ற செலவு விரயமும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மீனம்
உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பயணம் சார்ந்த செயல்களில் அனுபவம் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்