Feed Item
·
Added a post

"இங்கேயே வெயிட் பண்ணு. இதோ பத்து நிமிஷத்தில் வந்துடறேன்" என்று தன் நகைகளை வாங்கிக்கொண்டு,

விற்றுப் பணமாக மாற்றி வருவதாகச் சொல்லிச் சென்ற பிரகாஷை இன்னும் காணோமே என்று தவித்துக்கொண்டு இருந்தாள் கீதா.

இருவரும் சேர்ந்து அன்று ரயிலில் ஓடிப் போவதாகத் திட்டம். அவர்கள் செல்ல வேண்டிய ரயில் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன.

பதற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் கீதா. காதலனைத் தேடிய அவளது விழிகள் யதேச்சையாக அருகில் இருந்த அறிவிப்பு பலகையைப் பார்க்க, அதில் கை கழுவும் இடம்' என்று எழுதப்பட்டு இருந்தது!

-- ஞானாம்பாள்

  • 49