Feed Item
·
Added a news

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69-வது வயதில் காலமானார். நவம்பர் 14, சனிக்கிழமை இரவு சுமார் 11.35 மணிக்கு, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. சிறுநீரக பிரச்சினை காரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த அவர், அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 2001, 2004 தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சிவாஜிலிங்கம், நான்கு தசாப்தங்களாக தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களில் முன்னணியில் நின்றவர்.

அவரது இறுதிக்கிரியைகள் நாளை (16.11.2026) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, வல்வெட்டித்துறை நெடியகாடு கல்றோட் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • 165