Feed Item
·
Added a post

ஒரு காலத்தில் சோனி என்றால் எலக்ட்ரானிக்ஸ் உலகின் ராஜா என்ற பெயர் இருந்தது. சோனி மற்றும் பிலிப்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உலகை ஆட்சி செய்தன.

1946ல் உலகப் போருக்குப் பின் ஒரு சின்ன ரேடியோ கடையாகத் தொடங்கப்பட்டது தான் சோனி. பின்னாளில் தானே ரேடியோ தயாரித்தது. பின்னர் டிவி. அதன் Trinitron TV 1968இல் வெளியானது, 1970களில் உலகெங்கும் பிரபலமானது. 1979ன் Walkman அதை எங்கேயோ கொண்டு சென்றது.

1980க்களில் உலகை சோனியும், பிலிப்சும் ஆண்டன. தரத்தில் எந்த கம்பெனியும் அருகே கூட நிற்க முடியாது என்ற புகழைப் பெற்றன.

ஆனால் சோனி வீழ்ச்சியடைய காரணமே அதன் பிடிவாதம் தான் என சொல்லலாம்.

வீடியோ கேசெட்டுகளில் மற்ற கம்பெனிகள் VHS எனும் பொதுவான (open) வடிவை கொண்டு வந்தன. ஆனால் சோனி பிடிவாதமாக தன்னுடைய Betamax எனும் கேசெட் வடிவை மட்டும் பயன்படுத்தியது.

எல்லா கம்பெனிகளும் ஒரே வடிவில் VHS கேசெட்டை வெளியிட்டதால், எந்த வீடியோ பிளேயரிலும் போட்டு பார்க்க வசதியாக இருந்தது.

ஆனால் சோனியின் Betamax கேசெட்டை சாதாரண வீடியோ பிளேயரில் போட முடியாது; Betamax பிளேயரில் தான் போட முடியும். இதனால் Sony player–Betamax சந்தையில் மோனோபொலி ஆகலாம் என்று சோனி நினைத்தது.

ஆனால் தலைகீழாக நடந்தது. மற்ற எல்லா கம்பெனிகளின் வீடியோ கேசெட்டுகளையும் எல்லா பிளேயர்களிலும் பார்க்க முடிந்த நிலையில், Betamax மட்டும் பார்க்க முடியாததால் அதன் விற்பனை சரிந்தது. சோனி விழித்துக்கொண்டு VHS-க்கு மாற 1980களின் நடுப்பகுதிதான் ஆனது.

அதேபோல எல்லா கம்பெனிகளும் MP3 எனும் open standard முறையை பயன்படுத்த, சோனி பிடிவாதமாக MiniDisc எனும் வடிவை பயன்படுத்தியது. இதுவும் சோனியின் விற்பனை சரியக் காரணமாக இருந்தது.

தன் பிராண்டு மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, “ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டி வந்து வாடிக்கையாளர்கள் தன் பிராண்டை வாங்குவார்கள்” என்ற அதீத நம்பிக்கை தவறாகி முடிந்தது.

2005ம் ஆண்டு கடைசியாக அந்த மாபெரும் தவறைச் செய்தது சோனி.

தன் CD பிளேயர்களில் இருந்து இசையை மக்கள் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்வதைத் தடுக்க, CD-க்களில் ஒரு DRM software (rootkit)-ஐ இணைத்து வெளியிட்டது சோனி. அந்த software கணினியில் அமர்ந்து கொண்டு மக்களின் தகவல்களை திருடி சோனிக்கு அனுப்பியது. பின்னாளில் இதை பல ஹாக்கர்கள் பயன்படுத்தி பல தகவல்களை திருடினர்.

சோனியின் பெயர் சர்வதேச அளவில் கெட்டது. உலக அளவில் ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களின் கணினியில் வைரஸை ஏற்றுமா? அதுவும் நாம் நம்பும் சோனியா இப்படி செய்தது?

அதன்பின் சோனியின் பெயர் மெதுவாக சந்தையில் இருந்து மறைந்தது.

வாடிக்கையாளர் நம்மை விரும்பினாலும், அதற்காக அவர்களை அதிகமாக துன்புறுத்தக் கூடாது, சோதிக்கக் கூடாது.

சோனியின் வரலாறு உணர்த்தும் பாடம் இதுதான்.

(இது முகநூலில் வந்த பதிவு)

  • 440