Feed Item
·
Added a post

இன்றைய ராசி பலன்கள் - 8.10.2026

மேஷம்​ : நீண்​ட நாளாக எதிர்​பார்த்​திருந்​த செய்​தி​கள்​ வீடு தேடி வரும்​. ஈகோ பிரச்​சினை தீர்ந்​து தம்​ப​திக்​குள்​ அன்​யோன்​யம்​ பிறக்​கும்​. சகோ​தரர்​களின்​ ஒத்​துழைப்​பு உண்​டு. வி​யா​பாரத்​தில்​ புது வாடிக்​கை​யாளர்​கள்​ வரு​வார்​கள்​.

ரிஷபம்​ : பிரபலங்​களை சந்​திக்​கும்​ வாய்ப்​பு கிடைக்​கும்​. அரசு காரி​யங்​களில்​ அனுகூல​மான நிலை காணப்​படும்​. தாய்​வழி உறவினர்​களு​டன்​ இருந்​து வந்​த மனக்​கசப்​பு வில​கும்​. வீட்​டை அலங்​கரிப்​பீர்​கள்​. அலு​வல​கத்​தில்​ அமை​தி காக்​க​வும்​.

மிதுனம்​ : புதி​ய முயற்​சிகள்​ யா​வும்​ வெற்​றியடை​யும்​. பிள்​ளை​களின்​ உயர்​கல்​வி குறித்​து யோசிப்​பீர்​. வேற்​றுமொழி பேசுபவர்​களால்​ ஆதா​யம்​ கிடைக்​கும்​. வி​யா​பாரத்​தை விரிவுபடுத்​து​வீர்​. அலு​வல​கத்​தில்​ தான்​ உண்​டு தன்​ வேலை உண்​டு என்​று இருப்​பது நல்​லது.

கடகம்​ : நீண்​ட நாள்​ முயற்​சிக்​கு இப்​போது பலன்​ கிட்​டும்​. பிள்​ளைகள்​ கேட்​டதை வாங்​கித்​ தரு​வீர்​கள்​. ஆடம்​பர செல​வு​களை குறைத்​து சேமிக்​க தொடங்​கு​வீர்​. வி​யா​பாரத்​தில்​ புதி​ய யுக்​தி​களைக்​ கையாண்​டு வெற்​றி பெறு​வீர்​. அலு​வல​கத்​தில்​ மதிப்​பு, மரி​யாதை கூடும்​.

சிம்மம்​ : ராசிக்​குள்​ சந்​திரன்​ தொடர்​வ​தால்​ குடும்​பத்​தில்​ விட்​டுக்கொடுத்​துப்​ போவது நல்​லது. பிள்​ளை​களுக்​கு காய்ச்​சல்​, வயிற்​று​வலி வரக்​கூடும்​. அலு​வல​கத்​தில்​ நிதான​மாக செயல்​பட​வும்​. வி​யா​பாரத்​தில்​ திடீர்​ முடிவு வேண்​டாம்​. பங்​கு​தா​ரரை பகைத்​துக்​ கொள்​ளாதீர்​.

கன்​னி : உறவினர்​, பழைய நண்​பர்​கள்​ தேடி வந்​து பேசுவர்​. அரசால்​ அனுகூலம்​ உண்​டு. வழக்​கில்​ வெற்​றி பெறு​வீர்​. வேற்​றுமதத்​தவர்​ உதவுவர்​. வி​யா​பாரத்​தில்​ போட்​டிகளை தகர்த்​தெறிவீர்​. புதி​ய பங்​கு​தா​ரர்​களின்​ ஆலோ​சனை​களை ஏற்​க​வும்​. உத்​தி​யோகம்​ சிறக்​கும்​.

துலாம்​ : திட்​ட​மிட்​டபடி பயணம்​ அமை​யும்​. குடும்​ப உறுப்​பினர்​களின்​ விருப்​பங்​களை நிறைவேற்​று​வீர்​கள்​. பிள்​ளை​கள்​ பொறுப்​பாக நடப்​பார்​கள்​. நண்​பர்​கள்​, உறவினர்​கள்​ வீடு தேடி வரு​வார்​கள்​. வி​யா​பாரம்​ சூடு பிடிக்​கும்​.

விருச்சிகம்​ : தா​யாருடன்​ இருந்​த மனஸ்​தாபம்​ வில​கும்​. அரசு அதி​காரி​களின்​ உதவி​யால்​ சில காரி​யங்​களை முடிப்​பீர்​கள். புது வேலை கிடைக்​கும்​. வி​யா​பாரத்​தில்​ சரக்​கு​கள்​ விற்​றுத்​ தீரும்​. அலு​வல​கத்​தில்​ தேடிய ஆவணம்​ தென்​படும்​. மேல​தி​காரி​கள்​ பா​ராட்​டு​வர்​.

தனுசு : உடன்​பிறந்​தவர்​கள்​ பக்​கபல​மாக இருப்​பர்​. வீடு, மனை வாங்​கு​வது, விற்​பது லாபகர​மாக அமை​யும்​. பிரபலங்​கள்​ அறி​முக​மா​வார்​கள்​. அலு​வல​கத்​தில்​ வி​வாதங்​களை தவிர்க்​க​வும்​. வி​யா​பார ரீதி​யாக பயணங்​கள்​ மேற்​கொள்​ள வேண்​டி வரும்​.

மகரம்​ : குடும்​பத்​தினர்​ மத்​தி​யில்​ பழைய பிரச்​சினை​கள்​ பற்​றி எது​வும்​ பேச வேண்​டாம்​. ஆன்​மிகத்​தில்​ நாட்​டம்​ செலுத்​த​வும்​. வி​யா​பாரத்​தை பெரியள​வில்​ விரிவுபடுத்​த முயற்​சி மேற்​கொள்​வீர்​. பங்​கு​தா​ரர்​கள்​ ஆதர​வு தரு​வர்​. அலு​வல​கத்​தில்​ யாரை​யும்​ குறை கூற வேண்​டாம்​.

கும்பம்​ : அதிரடி திட்​டங்​களை தீட்​டு​வீர்​. பணவர​வு திருப்​தி​கர​மாக இருக்​கும்​. உங்​களை தேடிவந்​து சிலர்​ உதவி கேட்​பார்​கள்​. வெளியூர்​ பயணங்​களால்​ ஆதா​யம்​ உண்​டு. வி​யா​பாரத்தில் ஓரளவு லாபம்​ தரும்​. அலு​வல​கத்​தில்​ புதி​ய பதவிக்​கு பரிந்​துரைக்​கப்​படு​வீர்​.

மீனம்​ : எதார்த்​த​மான வார்த்​தைகளால்​ சிலரை கவரு​வீர்​. உறவினர்​, நண்​பர்​கள்​ உங்​களுக்​கு அதி​க முக்​கி​யத்​து​வம்​ தரு​வர்​. வழக்​கில்​ வெற்​றி பெறு​வீர்​கள்​. பழைய கடனை பைசல்​ செய்வீர்​கள்​அலு​வல​கத்​தில்​ அடுத்​தவர்​ ​விஷயத்​தில்​ தலை​யி​டாதீர்​.

  • 32