Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உறவினர்கள் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் சில மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

ரிஷபம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

வியாபாரம் ரீதியான ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். நீண்ட கால முதலீடு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். இறை சார்ந்த வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கடகம்

சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேலை ஆட்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அமைதி இன்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பகை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

தன வரவுகள் சாதகமாக இருக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். கடினமான விசயத்தையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

துலாம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். உத்யோக பணிகளில் பொறுமை வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

தனுசு

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் வரவுகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

கும்பம்

பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

எதிர்பாராத சில செலவுகள் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

  • 293