Feed Item
·
Added article

‘ஜெயிலர் 2’ படம் குறித்து சில விஷயங்களை பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் சிவராஜ்குமார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனிடையே இப்படம் குறித்து சிவராஜ்குமார் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

அதில், “’ஜெயிலர் 2’ படத்தில் ஒரு நாள் நடித்து முடித்துவிட்டேன். அடுத்து ஒரு நாள், ஜனவரியில் 3 நாட்கள் என கொடுத்துள்ளேன். ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாகவே இக்கதையினை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது எனது கதாபாத்திரம் இன்னும் அதிக நேரம் வரும்” என்று தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.

  • 34