கன்னடத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சைத்ரா ஜே ஆச்சர். இணையத்தில் எப்போதும் ஆக்வாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சிகரமான லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன.
2019-ஆம் ஆண்டு வெளியான 'மஹிரா' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் சைத்ரா ஜே ஆச்சர். அதைத் தொடர்ந்து, அகில இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற '777 சார்லி' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரின் சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் இவர் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான 'டோபி' திரைப்படம், இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.
கன்னட திரைப்படங்களில் அடுத்து அடுத்து நடித்து வந்த இவர், தமிழில் தேவயானி நடித்த '3 BHK' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்திற்கு பின், நடிகர் சசிகுமார் நடிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான 'மை லார்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் எதுவுமே தெரியாத ஒரு கிராமத்து பெண் ரோலில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சைத்ரா ஜே ஆச்சர். இந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது.
மூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் இயங்கி வரும் சைத்ரா ஜே ஆச்சர், அவ்வப்போது தனது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டில், அடர் சிவப்பு நிறப் பாவாடை மற்றும் அதற்குப் பொருத்தமான மேலாடையில் போஸ் கொடுத்துள்ளார். தலையில் துப்பட்டாவை முக்காடிட்டும், குத்தவைத்து அமர்ந்தபடியும் மாடர்ன் மற்றும் பாரம்பரியம் கலந்த பாணியில் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த வசீகரமான தோற்றமும், கம்பீரமான பார்வையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும், இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.